சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போக்குவரத்துக்கழக ஊழியர் சாவு


சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போக்குவரத்துக்கழக ஊழியர் சாவு
x
தினத்தந்தி 4 July 2021 9:16 PM GMT (Updated: 4 July 2021 9:16 PM GMT)

சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

சென்னிமலை
சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.  
அரசு ஊழியர்
சென்னிமலையில் உள்ள பி.ஆர்.எஸ்.ரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 54). இவர் காங்கேயம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழில்நுட்ப ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி இரவு 7.30 மணி        அளவில்   பழனிசாமி தனது   சொந்த வேலை காரணமாக பெருந்துறை சென்றார். 
பின்னர் அவர் பெருந்துறை ஆர்.எஸ். வழியாக மோட்டார் சைக்கிளில் சென்னிமலை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அவர் தகடூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் சென்னிமலையை சேர்ந்த முகமது இப்ராகிம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும்,  பழனிசாமி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.
சாவு
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
 பின்னர் மேல் சிகிச்சைக்காக       கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி          வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
அதேசமயம் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முகமது இப்ராகிம், அவரது மனைவி சாந்தி, குழந்தைகள் லீனாஸ்ரீ, சுகில்ராஜ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
அவர்கள் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story