கவுந்தப்பாடியில் 3 மாதங்களுக்கு பிறகு சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது
கவுந்தப்பாடியில் 3 மாதங்களுக்கு பிறகு சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடியில் 3 மாதங்களுக்கு பிறகு சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது.
சர்க்கரை மார்க்கெட்
கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உற்பத்தியாகும் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் ஆகியவற்றை விவசாயிகள் கவுந்தப்பாடி, சித்தோடு ஆகிய பகுதிகளில் உள்ள சர்க்கரை மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து தங்களுக்கு தேவையான வெல்லம், நாட்டு சர்க்கரையை மொத்தமாக கொள்முதல் செய்துவிட்டு செல்வார்கள்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 3 மாதங்களாக சர்க்கரை மார்க்கெட் செயல்படாமல் இருந்து வந்தது.
மீண்டும் தொடங்கியது
இந்நிலையில் கொரோனா நோய் தொற்றின் பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இதையடுத்து சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது. எனவே கவுந்தப்பாடி மற்றும் சித்தோடு மார்க்கெட்டுகளில் நாட்டு சர்க்கரை ஏலம் நடந்தது. முன்னதாக அங்கு கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மார்க்கெட்டுகளில் வெளிமாநில வியாபாரிகள் அதிகமாக கலந்துகொள்ளவில்லை. இதில் திடம் ரக சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,100 முதல் ரூ.1,140 வரையிலும், மீடியம் ரக சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,050 முதல் ரூ.1,080 வரையிலும், மட்ட ரக சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.950 முதல் 1,040 வரையிலும் விற்பனையானது. தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளதால் இனி நடக்கும் மார்க்கெட்டுகளில் வியாபாரம் அதிகமாக காணப்படும் என்று சர்க்கரை மார்க்கெட் சங்க நிர்வாகிகள் பி.ஏ.மசக்கவுண்டர், என்.என்.சுப்பிரமணியம், என்.ஏ.ராகவன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story