மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை

மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 July 2021 10:02 PM GMT (Updated: 4 July 2021 10:02 PM GMT)

மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்களை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஈரோடு
மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்களை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாகன தணிக்கை
ஈரோடு மாவட்டத்தின் எல்லையாகவும், கர்நாடக மாநிலத்தின் எல்லையாகவும் உள்ள ஆசனூரில் ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசாரின் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது யாரேனும் வாகனங்களில் மது கடத்தி வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் கொண்டுவரும் மது பாட்டில்களையும், வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
லஞ்சம்
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி வழக்கம்போல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது வாகனத்தில் கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆனால், காரை பறிமுதல் செய்யாமல் விடுவிக்க சம்மந்தப்பட்ட நபரிடம் போலீசார் கூகுள் பே மூலம் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு காரை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின்பேரில், ஆசனூர் சோதனைச் சாவடியில் கடந்த 2-ந்தேதி பணியாற்றிய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் மற்றும் போலீஸ் ஏட்டு சந்திர மோகன் ஆகியோரை, ஈரோடு மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.

Next Story