புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்தது; டிரைவர் காயம்- ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்தது; டிரைவர் காயம்- ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசம்
x
தினத்தந்தி 5 July 2021 3:42 AM IST (Updated: 5 July 2021 3:42 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசமானது.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசமானது. 
லாரி கவிழ்ந்தது
கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் இருந்து பெயிண்டு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று கேரள மாநிலம் கொல்லம் நோக்கி சென்றது. லாரியை திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த பாலமுருகன் (வயது 42) என்பவர் ஓட்டினார். அந்த லாரி நேற்று அதிகாலை 3 மணிஅளவில் புஞ்சைபுளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்பியபோது லாரி திடீரென நிலைத்தடுமாறி சாலையோரமாக கவிழ்ந்தது. இதில் லாரி தலை குப்புற கவிழ்ந்தது.
ரூ.2 லட்சம்
இந்த விபத்தில் லாரி டிரைவர் பாலமுருகன் காயத்துடன் உயிர் தப்பினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு சாலையில் கொட்டி வீணானது. 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
1 More update

Next Story