9-வது மாடியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை


9-வது மாடியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 5 July 2021 8:14 AM IST (Updated: 5 July 2021 8:14 AM IST)
t-max-icont-min-icon

9-வது மாடியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் வசித்து வந்தவர் பங்காரு சாவித்திரி தேவி (வயது 81). இவர், கடந்த 2 வருடமாக சிறுநீரக பிரச்சினைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி, நேற்று கடிதம் எழுதி வைத்து விட்டு, அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பங்காரு சாவித்திரி தேவி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராயப்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story