கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு: மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் பயணம்
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை,
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வரும் 6-ந் தேதி திருவாரூர் செல்ல உள்ளார். இதற்காக அவர் 6-ந் தேதி (நாளை) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார்.
முதல் நிகழ்வாக காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
மறுநாள் காலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து திருக்குவளைக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார்.
கருணாநிதிக்கு மரியாதை
அங்கு தனது தந்தை கருணாநிதி பிறந்து, வளர்ந்த இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார். கருணாநிதி படத்திற்கு அவர் மரியாதை செலுத்துகிறார்.
நிர்வாகிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார். அதன் பின்னர் அன்று மாலையே திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சென்னைக்கு மு.க.ஸ்டாலின் புறப்படுகிறார்.

Related Tags :
Next Story