பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை: அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 23.62 அடியாக உயர்வு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீா்மட்டம் 23.62 அடியாக உயர்ந்தது.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீா்மட்டம் 23.62 அடியாக உயர்ந்தது.
தொடர் மழை
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் பாலக்கரை, கொங்காடை, தாமரைகரை ஆகிய பகுதியில் பெய்யக்கூடிய மழை நீரானது வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன.
இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகின்றன.
23.62 அடியாக உயர்வு
இதனால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 22.62 அடியாக இருந்தது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், வரட்டுப்பள்ளம் அணைக்கு 11 கனஅடி தண்ணீர் வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 23.62 அடியாக ஆனது. தொடர்ந்து இதேபோல் மழை பெய்தால் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறு அணை நிரம்பினால் அப்பகுதியில் வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும். மேலும் அணை மூலம் அந்தியூர் பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
Related Tags :
Next Story






