ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
330 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை ஈரோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 349 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்தநிலையில் நேற்று புதிதாக 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்து 957 ஆக உயர்ந்தது. இதில் 86 ஆயிரத்து 268 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 287 பேர் குணமடைந்தனர். தற்போது 4 ஆயிரத்து 80 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
3 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த மாதம் 30-ந் தேதியும், 40 வயது பெண், 49 வயது பெண் ஆகியோர் கடந்த 3-ந் தேதியும் உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 609 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story