ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல்


ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 6 July 2021 2:10 AM IST (Updated: 6 July 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு வருகிற 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் வெளியில் சுற்றி திரிகின்றனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக வாகனங்களை கண்காணித்து வந்தனர்.
ரூ.1½ கோடி வசூல்
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திடீர் சோதனை செய்து அபராதம் விதித்து வந்தனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்த 17 ஆயிரத்து 631 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.35 லட்சத்து 26 ஆயிரத்து 200 வசூல் செய்யப்பட்டு உள்ளது.
இதைப்போல் சமூக இடைவெளியை பின்பற்றாத 1,607 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 3 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 30 ஆயிரத்து 576 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இதுவரை 26 ஆயிரத்து 107 மோட்டார் சைக்கிள்களும், 196 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் இதுவரை ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story