மாங்காட்டில் மது குடிக்க பணம் தராததால் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது
மாங்காட்டில் மது குடிக்க பணம் தராததால் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது.
பூந்தமல்லி,
மாங்காடு, சின்ன கொளுத்துவான்சேரி, அருள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா (வயது 50), இவரது மகன் மணியரசு (25), கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மது குடிப்பதற்கும், கஞ்சா அடிப்பதற்கும் தாயிடம் பணம் கேட்டுள்ளார்.
அம்பிகா பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மணியரசு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்தில் குத்த முயற்சி செய்தார். அதனை தடுத்த போது அம்பிகா கண்ணில் கத்தி பட்டு ரத்தக்காயம் ஏற்பட்டு அலறினார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அம்பிகாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மணியரசுவை மாங்காடு போலீசார் கைது செய்தனர். மேலும் மணியரசு கடந்த 2017-ம் ஆண்டு தனது தந்தை சுப்பிரமணியை கல்லால் அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story