பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2021 9:37 AM IST (Updated: 6 July 2021 9:37 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சுபமங்களா கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், கொரோனா தொற்று பரவ காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Next Story