கோபி அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


கோபி அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 3:51 AM IST (Updated: 7 July 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர்
கோபி அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவி கர்ப்பம்
கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 3-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது டாக்டர்களுக்கு தெரியவந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரியாதேவி மற்றும் அதிகாரிகள் அந்த மாணவியை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மாணவியின் மாமா முறையான கார்த்திக் (வயது 23) என்பவரும், மாணவியின் சகோதரர் முறையான 17 வயது சிறுவர்கள் 2 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 
3 பேர் கைது
இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக கார்த்திக், 2 சிறுவர்கள் ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.
கைதான கார்த்திக்கை ஈரோடு கிளைச்சிறையிலும், 2 சிறுவர்களை கோவையில் உள்ள  கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர்.

Next Story