அறநிலையத்துறை ஏற்று நடத்தும் அமைந்தகரை பள்ளியின் பெயர் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி என மாற்றம்


அறநிலையத்துறை ஏற்று நடத்தும் அமைந்தகரை பள்ளியின் பெயர் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி என மாற்றம்
x
தினத்தந்தி 7 July 2021 9:49 AM IST (Updated: 7 July 2021 9:49 AM IST)
t-max-icont-min-icon

அறநிலையத்துறை ஏற்று நடத்தும் அமைந்தகரை பள்ளியின் பெயர் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி என மாற்றம் புதிய கட்டிடம் கட்ட 9-ந்தேதி பூமி பூஜை.

சென்னை,

சென்னை அமைந்தகரையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் பள்ளி வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் திடீரென மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளியை தமிழக அறநிலையத்துறை ஏற்று நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பள்ளியின் பெயரும் ‘காஞ்சீபுரம் அருள்மிகு ஏகாம்பர நாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி’ என்று பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.நிர்மலா கவுரி கூறுகையில், ‘பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்தினாலும் சுயநிதி பள்ளியாக செயல்படும். தற்போது 732 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். புதிதாக 90 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். புதிதாக 2 அடுக்கு மாடிகள் கொண்ட வகுப்பறை கட்டிடமும் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் நடக்கிறது’ என்று தெரிவித்தார்.

Next Story