ஐ.டி.ஐ. படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


ஐ.டி.ஐ. படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 July 2021 10:33 AM IST (Updated: 7 July 2021 10:33 AM IST)
t-max-icont-min-icon

ஐ.டி.ஐ. படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு இட ஒதுக்கீட்டில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 2-ம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் வருகிற 28-ந்தேதி வரை WWW.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்கள் இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யவும் செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மேற்காணும் இணையதளம் அல்லது 9499055673 9962986696 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது துணை இயக்குனர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம். செங்கல்பட்டு, முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம். பெரும்பாக்கம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இணையதளத்தில் பதிவேற்றத்துக்கான கடைசி நாள் வருகிற 28-ந்தேதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story