கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
பள்ளிப்பட்டு,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் நேற்று கிருத்திகை விழா நடைபெற்றது. கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் என்பதால் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் கோவிலில் குவிந்தனர்.
கோவிலில் உள்ள மூலவருக்கு பால், பழம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
மலர் அலங்காரம்
வள்ளி, தெய்வயானை உடனுறை உற்சவர் முருகபெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.இதில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி மொட்டையடித்து முருகபெருமானை தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story