மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மை குறித்து மருத்துவ சான்று அளிப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இதற்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை தாங்கினார். முகாமில் டாக்டர்கள் பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மை குறித்து மருத்துவ சான்றிதழை வழங்கினர்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தின்கீழ் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
உடனே அவர்களை தங்கள் கோரிக்கை குறித்து மனுவாக கொடுக்கும்படி ஆர்.டி.ஓ. கூறினார். இதையடுத்து அவர்கள் மனு அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story