ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 July 2021 2:26 AM IST (Updated: 8 July 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பில் கோவைக்கு அடுத்ததாக ஈரோடு காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மெதுவாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 311 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
குறைந்தது
இந்தநிலையில் நேற்று புதிய பாதிப்பு 300-ஐ விட குறைந்துவிட்டது. புதிதாக 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்து 82 ஆக உயர்ந்தது. இதில் 86 ஆயிரத்து 826 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
நேற்று மட்டும் 256 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்கள். 3 ஆயிரத்து 647 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 609 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story