பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 July 2021 2:41 AM IST (Updated: 8 July 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை
 தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக     விளங்குகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. 
இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து அணையின்
நீர்மட்டம் உயர்ந்தது. 
நீர்வரத்து அதிகரிப்பு 
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 127 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 93.15 அ.டியாக இருந்தது
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 1,672 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 93.33 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
1 More update

Next Story