சுற்றுச்சுவரை காலால் மிதித்து தள்ளி பூங்காவுக்குள் புகுந்த யானைகள்


சுற்றுச்சுவரை காலால் மிதித்து தள்ளி பூங்காவுக்குள் புகுந்த யானைகள்
x
தினத்தந்தி 8 July 2021 2:58 AM IST (Updated: 8 July 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணை அருகில் சுற்றுச்சுவரை காலால் மிதித்து தள்ளி பூங்காவுக்குள் புகுந்த யானைகள், மரத்தையும் வேரோடு சாய்த்தது.

பவானிசாகர் அணை அருகில் சுற்றுச்சுவரை காலால் மிதித்து தள்ளி பூங்காவுக்குள் புகுந்த யானைகள், மரத்தையும் வேரோடு சாய்த்தது.
பொழுதுபோக்கு பூங்கா
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல்,  சிறுவர் ரெயில் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. 
இதனால் சுற்றுலா பயணிகள் தினமும் பொழுதுபோக்கு பூங்காவுக்கு வந்து இளைப்பாறி செல்வது வழக்கம்.
யானைகள் அட்டகாசம்
மேலும் பவானிசாகர் அணையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இங்குள்ள யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து அருகே உள்ள அணை பூங்கா பகுதிக்கு வந்து செல்லும்.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் பவானிசாகர் அணை பூங்கா பகுதிக்கு வந்தன. பின்னர் பூங்காவின் சுற்றுச்சுவரை காலால் மிதித்து தள்ளி பூங்காவுக்குள் புகுந்தன. அங்கு அழகுக்காக வளர்க்கப்பட்ட 2 மரங்களை யானைகள் துதிக்கையால் அசைத்து  வேருடன் சாய்த்தன. பூங்காவின் செடிகளையும் காலால் மிதித்து நாசப்படுத்தின.
அச்சம்
அணை பொழுதுபோக்கு பூங்காவில் யானைகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதை கண்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் இதுபற்றி உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
 பொழுதுபோக்கு அணை பூங்காவில் யானைகள் நடமாட்டத்தால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story