சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு


சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 8 July 2021 3:13 AM IST (Updated: 8 July 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர

சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பணி நிரந்தரம்
ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாநகராட்சியில் சுகாதார பணியில் 1,800 பேர் பணி செய்கின்றனர். இவர்களில் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், டெங்கு  மலேரியா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டி.பி.சி. பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரித்தல், சுகாதார மேற்பார்வையாளர்கள், குடிநீர் வினியோகிப்போர், பிளம்பர், கணினி இயக்குனர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் என பணி செய்கின்றனர்.
இவர்களில் 1,400 பேர் பணி நிரந்தரப்படுத்தப்படாத தொழிலாளர்கள். இதே நிலைதான் நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து என அனைத்து அமைப்பிலும் உள்ளது. இவர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவர்களுக்கான ஊதியம், அரசின் குறைந்த பட்ச கூலி சட்ட நிர்ணயத்தைவிட குறைவாகும்.
ஊதிய முரண்பாடு
அதன்படி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் ரூ.676-ம், நகராட்சியில் ரூ.562-ம், பேரூராட்சியில் ரூ.484-ம், பஞ்சாயத்துக்களில் ரூ.400-ம் என தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஓட்டுனர்களுக்கு, ரூ.710 வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பட்டதாரிகளான சுகாதார மேற்பார்வையாளர்கள், கணினி அறிவியல் படித்த கணினி இயக்குனர், டேட்டா என்டரி ஆப்ரேட்டர்களுக்கு ரூ.676 ஊதியமாக வழங்குகின்றனர். அதுபோல், பிற உள்ளாட்சி அமைப்பிலும் ஊதிய முரண்பாடு உள்ளதை சரி செய்து, இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story