கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற  1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 9 July 2021 2:00 AM IST (Updated: 9 July 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1,000 லிட்டர் மண்எண்ணெயை தாசில்தார் விஜயலெட்சுமி பறிமுதல் செய்தார்.

களியக்காவிளை, 
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1,000 லிட்டர் மண்எண்ணெயை தாசில்தார் விஜயலெட்சுமி பறிமுதல் செய்தார்.
வாகன சோதனை
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெய் கடத்தப்படுகிறது. அதை தடுப்பதற்காக அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விளவங்கோடு தாசில்தார் விஜயலெட்சுமி, துணை தாசில்தார் சுனில்குமார் ஆகியோர் மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள்.
1,000 லிட்டர் மண்எண்ணெய்
அப்போது சிராயன்குழி பகுதியில் வந்த காரை அதிகாரிகள் நிறுத்த கூறினார்கள். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே சந்தேகத்தின் பேரில் அந்த காரை வாகனத்தில் துரத்தி சென்றனர். டிரைவர் குறுக்கு சந்தில் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். 
அதைத்தொடர்ந்து காரில் தாசில்தார் சோதனை செய்தபோது அதில் 25 கேன்களில் சுமார் 1000 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது தெரிய வந்தது. அந்த மண்எண்ணெயை கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மண்எண்ணெயையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story