பிறந்தநாளில் சோகம் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்ெகாலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு


பிறந்தநாளில் சோகம் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்ெகாலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 9 July 2021 4:11 AM IST (Updated: 9 July 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தனது பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

கடத்தூர்
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தனது பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தொழிலாளி. கோபி டவுன் சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 22). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து ெகாண்டனர். நஞ்சகவுண்டன்பாளையத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் லின் இஸ்கா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது சண்முகப்பிரியா 4 மாத கர்ப்பமாக இருந்தார்.
வாக்குவாதம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளை சண்முகப்பிரியா அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை லின் இஸ்கா ஸ்ரீ தந்தை மலைச்சாமியிடம் அம்மா தன்னை அடித்து விட்டதாக கூறினாள்.
அதனால் மலைச்சாமி சண்முகப்பிரியாவிடம், ஏன் மகளை அடித்தாய்? எனக்கேட்டு மனைவியை அடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் மலைச்சாமிக்கும், சண்முகப்பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 பேரும் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
 விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் சண்முகப்பிரியாவுக்கு பிறந்தநாள் வந்தது. அப்போதும் மலைச்சாமி அவருடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்்த சண்முகப்பிரியா கோபித்துக்கொண்டு சீதாலட்சுமிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகளுடன் சென்றுவிட்டார். மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகப்பிரியா இறந்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
 இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தாய் மீனாட்சி கோபி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் சண்முகப்பிரியாவுக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தனது பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story