ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 9 July 2021 4:11 AM IST (Updated: 9 July 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் தற்போது வரை 4 லட்சத்து 59 ஆயிரத்து 853 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு இடம் உள்பட மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் டோஸ் மட்டும் நேற்று முன்தினம் போடப்பட்டது.
3,950 பேருக்கு போடப்பட்டது
இந்த நிலையில் மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, கொடுமுடி, திங்களூர், புளியம்பட்டி, ஈரோடு, டி.என்.பாளையம், நம்பியூர், சிறுவலூர், உக்ரம், தாளவாடி, சென்னிமலை ஆகிய 14 ஊராட்சிகளில் தலா 150 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், தலா 100 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 150 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும், பெரியசேமூர் மற்றும் சூரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 150 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டது. வழக்கம்போல் டோக்கன் வழங்கப்பட்டு, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Next Story