மாங்காடு அருகே போலீஸ் என கூறி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தியதால் பரபரப்பு 3 பேர் கைது
மாங்காடு அருகே போலீஸ் என கூறி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரியாத் அலி (வயது 39). ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு வந்த நபர்கள் தாங்கள் குற்றப்பிரிவு போலீஸ், விசாரிக்க வேண்டும் என்று கூறி காரில் அழைத்து சென்றனர். காரில் செல்லும் வரை தன்னை அழைத்து செல்பவர்கள் போலீசார்தான் என்று அவர் நம்பினார்.
மவுண்ட் - பூந்தமல்லி சாலை போரூர் அருகே சென்ற போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த காரை மடக்கி சோதனை செய்தபோது காருக்குள் இருந்தவர்கள் தாங்கள் போலீசார் என்று கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்கள்.
மேலும் உள்ளே இருந்த ரியாத் அலி அலறினார். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது தான் காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து அவர்களை அழைத்து சென்று மாங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்தபோது பிடிபட்டவர்கள் கரூரை சேர்ந்த ராஜா என்ற வைராஜா (31), சுரேஷ் (32), கார் டிரைவர் சரவணன் (30), என்பதும் தர்மராஜ் என்பவருக்கும், ரியாத் அலிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் ஆட்களை வைத்து ரியாத் அலியை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கார், கத்தி போன்றவற்றை கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story