கழுத்தை அறுத்து மீனவர் கொலை


கழுத்தை அறுத்து மீனவர் கொலை
x
தினத்தந்தி 9 July 2021 10:10 PM IST (Updated: 9 July 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

கழுத்தை அறுத்து மீனவர் கொலை செய்யப்பட்டார்.

சாயல்குடி, 
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வேளாங்கண்ணி, மகன் கேசவன், மகள் விஷ்ணுபிரியா.  வேளாங்கண்ணியும், கேசவனும் ராமநாதபுரம் அருகே உள்ள திணைகுளம் கிராமத்தில் விஷ்ணு பிரியா வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் முருகன் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள், முருகனை தாக்கி கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். நேற்று காலை முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் சாயல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ெகாலையாளிகளை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story