ஜோலார்பேட்டை அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த திரியாலம் டி.வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மனைவி ரோஜா (வயது 45). கணவன்-மனைவி இருவரும் தங்களின் வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தில் குடும்பத்துடன் வேலை செய்து கொண்டு இருந்தனர். அருகில் வேலை செய்ததால் யாரும் வர மாட்டார்கள் என நினைத்து அவர்கள் வீட்டை பூட்டவில்லை.
பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் யாரோ துணிச்சலாக வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு ரோஜா வீட்டுக்குள் வந்து பார்த்தார். வீட்டில் திருட்டு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ரோஜா ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசாரும், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கமும் திருட்டு நடந்த வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story