கர்நாடகத்தில் 2½ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி; துணை முதல்-மந்திரி தகவல்
கர்நாடகத்தில் 2½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக துணை முதல்-மந்திரியும், உயர்கல்வித்துறை மந்திரியுமான அஸ்வத் நாராயண் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் உள்ள அரசு கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 62,255 ஆகும். இதில் மாணவர்கள், ஊழியர்கள் என 31,826 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இது 51.12 சதவீதம் ஆகும். 31 ஆயிரத்து 147 மாணவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். தடுப்பூசி செலுத்தி கொள்வதில் கர்நாடக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது 4.70 கோடி மக்கள் தொகையில் 2½ கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story