ஈரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே மேம்பால பாதுகாப்பு இரும்பு கம்பி மீது அரசு பஸ் மோதல்- 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே மேம்பால பாதுகாப்பு இரும்பு கம்பி மீது அரசு பஸ் மோதியதால் அந்த பகுதியில் நேற்று 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே மேம்பால பாதுகாப்பு இரும்பு கம்பி மீது அரசு பஸ் மோதியதால் அந்த பகுதியில் நேற்று 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதுகாப்பு இரும்பு கம்பி
ஈரோடு சென்னிமலை ரோடு கே.கே.நகர் ரெயில்வே பாலம் மற்றும் சாவடிபாளையம் ரெயில்வே பாலத்தின் அருகே உயர்மட்ட பாதுகாப்பு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர் பகுதிக்குள் பெரிய கனரக வாகனங்கள் வருவதை தடுக்கும் வகையில் இந்த கம்பிகள் ரெயில்வே துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னிமலை ரோடு கே.கே.நகரில் உள்ள ரெயில்வே பாலத்தின் அருகே இருந்த உயர்மட்ட தடுப்பு பாதுகாப்பு இரும்பு கம்பியில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் உயர்மட்ட தடுப்பு பாதுகாப்பு கம்பி உடைந்து ரோட்டில் குறுக்காக விழுந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இரவு நேரம் என்பதால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கும், சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கும் இந்த வழியாகத்தான் சென்று வரவேண்டும். இதனால் நேற்று காலை அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடைந்து கிடந்த இரும்பு கம்பியை ரோட்டில் இருந்து அகற்றி சாலையோரம் போட்டனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இந்த விபத்து காரணமாக சென்னிமலை ரோட்டில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story