12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 July 2021 3:07 AM IST (Updated: 10 July 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கட்டிட தொழிலாளி
ஈரோட்டை சேர்ந்தவர் குமார் என்கிற சரவணன் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறினார்.
இவர் குடியிருக்கும் வீட்டின் அருகில் பெண் ஒருவர் தனது 13 வயது மற்றும் 12 வயது மகள்களுடன் வசித்து வருகிறார். 
இவருடைய கணவர் இறந்துவிட்டதால் மாமியாருடன் வசித்து வருகிறார். இதில் 12 வயது சிறுமி 6-ம் வகுப்பு முடித்து விட்டு தற்போது 7-ம் வகுப்பு செல்ல உள்ளார். இந்த நிலையில் சரவணன் 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
போக்சோவில் கைது
இதில், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா வழக்குப்பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

Next Story