பெருந்துறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்தது

பெருந்துறையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பெருந்துறையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, பெருந்துறையில் பவானி ரோடு அண்ணா சிலை அருகே நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மக்கள்ராஜன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் ராவுத்தகுமார், பெருந்துறை வடக்கு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் ஆண்டமுத்துசாமி, திருவாச்சி ஊராட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாலு, நல்லாம்பட்டி நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நம்பியூர்
இதேபோல் நம்பியூர் பெட்ரோல் பங்க் முன்பு வட்டார, நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் கே.பி.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சதீஷ்குமார், நம்பியூர் நகர செயலாளர் மனோகர், இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூர்த்தி, மருதாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் டி.பி.கந்தசாமி, உதயகுமார், சிறுபான்மை பிரிவை சேர்ந்த நசூர், இசாக், முஜிபூர்ரகுமான், அம்ஜத்கான் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாணவர் காங்கிரஸ் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டன.
கோபி
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதயகுமரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோதண்டன், காங்கிரஸ் கட்சியின் டி.என்.பாளையம் வட்டார தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






