உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 10 July 2021 8:02 AM IST (Updated: 10 July 2021 8:02 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.

வீட்டின் பூட்டு உடைப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 64). ஓய்வுபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி பார்வதி (62). தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தியாகராஜனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சென்னையில் உள்ள தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.

நகை-பணம் திருட்டு
அவர் இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அவரது வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

உத்திரமேரூர் பகுதியை சுற்றி அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story