ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழில் அதிபரை தாக்கிய 2 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால் நல்லூர் திருவீதி அம்மன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). இவர் கட்டுமான பணிக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
பால்நல்லூர் பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கு பொருட்களை வினியோகம் செய்து வந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் (30), மணிமாறன் (42), ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் அந்த தொழிற்சாலைக்கு நீ பொருட்களை வினியோகம் செய்ய கூடாது, நாங்கள்தான் வினியோகம் செய்வோம் என்று மிரட்டி வந்தனர். நேற்று பால்நல்லூர் பகுதியில் தனியாக சென்ற ஆனந்தனை வழி மறித்து அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஆனந்தன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், மணிமாறன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story