ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது


ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2021 10:35 PM IST (Updated: 10 July 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே சாக்கோட்டை போலீஸ் சரகம் பனம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் போலீசாருடன் அங்கு சென்றார். அங்கு காட்டுப்பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் பட்டாக்கத்தி, வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் விளாரிக்காட்டைசேர்ந்த மணிகண்டன் (வயது 47), கருப்புசாமி (23), சின்ராசு (28) மதுரையை சேர்ந்த அழகர் (32), வத்தலகுண்டை சேர்ந்த தேவா (22) என்றும், அவர்கள் அப்பகுதியில் கொள்ளையடிப்பதற்காக அங்கே கூடி ஆலோசித்து வந்ததும் தெரியவந்தது. அதனையொட்டி அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story