கோடை அறுவடை பணிகள் தீவிரம்


கோடை அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 10 July 2021 10:56 PM IST (Updated: 10 July 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் கோடை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 7 ஆயிரத்து 109 எக்டேர் பரப்பளவில் பணிகள் நிைறவு பெற்று உள்ளது.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் கோடை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 7 ஆயிரத்து 109 எக்டேர் பரப்பளவில் பணிகள் நிைறவு பெற்று உள்ளது.
காவிரி நீர்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியில் திருவாரூர் மாவட்டம் நெல் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இந்த பகுதியில் மற்ற பயிர்களை விட நெல் உற்பத்தி ஏற்ற மண் வளம் அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலானா இடங்களில் ஆற்று பாசனத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் காவிரி நீர் உழவு தொழிலுக்கு உயிர் ஆதாரமாக இருந்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இருந்து வருவதால் உரிய காலத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
நிலத்தடிநீர்
இதனால் குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி முழுமையாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் சம்பா அறுவடை முடிந்த பின்னர் குறைவான தண்ணீரில் போதிய மகசூல் கிடைக்கும் பணப் பயிர்களான பச்சை பயிறு, உளுந்து மற்றும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோடை சாகுபடி என்பது நிலத்தடி நீரை நம்பி மட்டுமே நடைபெற்று வருகிறது. இதகால் குறைவான பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 8 ஆயிரத்து 725 எக்டேர் பரப்பளவில் கோடை சாகுபடியில் விவசாயிகள் மேற்கொண்டனர். இதில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொள்முதல் நிலையம்
இதை கருத்தில் கொண்டு கோடை அறுவடை நடைபெறும் இடங்களை கணக்கில் கொண்டு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை அறுவடை பணிகள் இதுவரை 7 ஆயிரத்து 109 எக்டேர் பரப்பில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.  மேலும் 20 சதவீதம் பணிகள் இன்னும் சில நாட்களுக்குள் நிறைவு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story