தந்தையின் பாலியல் தொல்லையால் பீகாரில் இருந்து ரெயிலில் பெங்களூருவுக்கு தப்பி வந்த மைனர் பெண்


தந்தையின் பாலியல் தொல்லையால் பீகாரில் இருந்து ரெயிலில் பெங்களூருவுக்கு தப்பி வந்த மைனர் பெண்
x
தினத்தந்தி 10 July 2021 8:03 PM GMT (Updated: 10 July 2021 8:03 PM GMT)

வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி பெங்களூரு ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டாள்.

பெங்களூரு: பெங்களூரு கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்திற்கு யஷ்வந்தபுரம்-தனபூர் ரெயில் வந்தது. அந்த ரெயில் சென்றதும் நடைமேடையில் ரெயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நடைமேடையில் அமர்ந்து ஒரு மைனர் பெண் அழுது கொண்டு இருந்தாள். அந்த மைனர் பெண்ணிடம் ரெயில்வே போலீசார் விசாரித்தனர். 

அப்போது அந்த மைனர் பெண் பீகார் மாநிலம் கிழக்கு சம்ப்ரான் பகுதியை சேர்ந்தவள் என்பதும், தந்தையின் தொடர் பாலியல் தொல்லையால் மனம் உடைந்து வீட்டில் இருந்து வெளியேறி ரெயில் மூலம் பெங்களூருவுக்கு தப்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் மைனர் பெண்ணை மீட்டு காப்பகத்தில் விட்டனர்.

Next Story