மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2021 2:22 AM IST (Updated: 11 July 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் துரை சேவுகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஆனந்தம் ராஜேஷ் (கிழக்கு), சதானந்தம் (தெற்கு), சிவகுமார் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாற்று எரிபொருளை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மக்கள் நீதி மய்யத்தின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story