25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
25 சதவீத இட ஒதுக்கீடு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 2021-2022-ம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, குறைந்த பட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெற காலியாக உள்ள இடங்கள் மற்றும் பள்ளிகளின் விவரங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 107 மெட்ரிக் பள்ளிகள், ஒரு சுயநிதி பள்ளி மற்றும் 89 தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு சேர்க்கைக்கு மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதன்மை கல்வி அலுவலகம்
தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகளின்படி எல்.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க வீட்டு முகவரியில் இருந்து பள்ளிக்கு 1 கிலோ மீட்டர் தூரம் இருக்க வேண்டும். பெற்றோர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும், ஈரோடு முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது, பிறப்புச் சான்று, இருப்பிட சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல், பெற்றோர், பாதுகாவலரால் வயது நிரூபிக்க எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி, ஆதார் அட்டை (பெற்றோர் மற்றும் குழந்தை), குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். எனவே, பெற்றோர்கள் இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி குழந்தைகளை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் அல்லது நலிவடைந்த பிரிவினருக்கான ஏதேனும் ஒரு பிரிவில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story