மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம், நகை பறிப்பு; மாணவர் கைது


மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம், நகை பறிப்பு; மாணவர் கைது
x
தினத்தந்தி 11 July 2021 9:24 AM IST (Updated: 11 July 2021 9:24 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான 11-ம் வகுப்பு மாணவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியிடம் நட்புடன் பழகி வந்தார்.

இருவரும் தனியிடங்களுக்கு சென்று செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவன் சில நாட்களுக்கு முன் அந்த மாணவியிடம் நகை, பணம் கேட்டுள்ளார். மாணவி கொடுக்க மறுக்கவே தன்னுடன் செல்போனில் நெருக்கமாக ஆபாசமாக உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து அந்த மாணவி ெபற்றோருக்கு தெரியாமல் நகை, பணம் போன்றவற்றை மாணவருக்கு கொடுத்தார்.

இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மாணவரை கைது செய்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Next Story