தூத்துக்குடி மண்டலதிருக்கோவில் தொழிலாளர் சங்க கூட்டம்


தூத்துக்குடி மண்டலதிருக்கோவில் தொழிலாளர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 11 July 2021 6:15 PM IST (Updated: 11 July 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் சங்க அவசர கூட்டம் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் வளாகத்தில் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் சங்க அவசர கூட்டம் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கல்யாணசுந்தரம் என்ற செல்வம்பட்டர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களின் வாழ்வாதாரம் கருதி, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத பணியிடங்களில் தக்கார் மற்றும் அறங்காவலர் குழு தீர்மானம் இன்றி பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தற்காலிகமாக ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அந்த பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
1 More update

Next Story