தச்சு தொழிலாளி பலி
கம்பத்தில் அரசு பஸ் மோதி தச்சு தொழிலாளி ஒருவர் பலியானார்.
கம்பம்:
கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு புதுபஸ்நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது புதிய பஸ்நிலையத்தில் பஸ் வெளியே வரும் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் முருகன் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் கம்பம் ஆலமரத் தெருவை சேர்ந்த பாஸ்கரன் (45) என்பவர் மீது கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story