காணொலிக் காட்சி மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்


காணொலிக் காட்சி மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 12 July 2021 11:59 AM IST (Updated: 12 July 2021 11:59 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை அளிப்பதற்கு மாற்றாக இன்று(திங்கட்கிழமை) திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய 9 தாசில்தார் அலுவலகங்களிலிருந்த காணொலிக் காட்சி மூலமாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Next Story