மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார் + "||" + MK Stalin slams Udayanidhi on Twitter Complaint

மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்

மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்
மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்.
தாம்பரம்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரை இழிவுபடுத்தி ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதியும், தாம்பரம் நகர 30-வது வட்ட பிரதிநிதியுமான குறிஞ்சி சிவா (வயது 56) என்பவர் இதுதொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலைத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரில், “டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த ஆட்சியின் அவலங்கள்’ என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரை கொச்சைப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும் பதிவு செய்து உள்ளனர். இது அவர்கள் இருவரது நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 3 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறி சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
திருவொற்றியூரில் 3 வயது பெண் குழந்தை திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது. தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
2. வேலை வாங்கி தருவதாக மோசடி புகார்: தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகிகள் மீது வழக்கு
வேலை வாங்கி தருவதாக மோசடி புகார்: தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகிகள் மீது வழக்கு.
3. முகத்தில் திராவகம் வீச முயற்சி முன்னாள் காதலர் மீது நடிகை புகார்
இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளவர் அக்‌ஷரா சிங். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
4. நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
அண்ணாத்த படத்தின் போஸ்டர் கொண்டாட்டத்தில் ஆட்டை வெட்டும் வீடியோ ஒன்றை வைரலாகி வருவதால் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5. இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு எதிராக புகார்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு எதிராக புகார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை