விபத்தில் உயிரிழந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.24½ லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு
விபத்தில் உயிரிழந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.24½ லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36). டிரைவர். கடந்த 2018-ம் ஆண்டு இவர், மணலிபுதுநகரில் திருமங்கலம்-ரெட்டேரி 100 அடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி கருப்பசாமியின் மனைவி கலைவாணி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரர் கணவர் இறப்புக்கு கன்டெய்னர் லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் எனக்கூறி மனுதாரருக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக 24 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story