குன்றத்தூரில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது


குன்றத்தூரில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 12 July 2021 5:39 PM IST (Updated: 12 July 2021 5:39 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது.

பூந்தமல்லி,

ஆவடி அடுத்த திருநின்றவூரை சேர்ந்த 21 வயதுடைய பெண் கணவருடன் வசித்து வந்தார். அவரது கணவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் அதற்கு வசதியாக குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதை அவரது உறவினர் மணி (வயது 26) அடிக்கடி வந்து தீர்த்து வைத்துள்ளார். சம்பவத்தன்று மணி அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்த போது அருகில் உள்ள முட்புதரில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இது குறித்து அந்த பெண் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி மணியை கைது செய்தார்.
1 More update

Next Story