சுங்குவார்சத்திரம் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
சுங்குவார்சத்திரம் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 29). இவர் 2018-ம் ஆண்டு திருமங்கலம் அருகே போலீஸ் ஏட்டு மோகன்ராஜ் என்பவரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேல்முருகன் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேல்முருகன் வீட்டில் ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஜேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வேல்முருகன் குடிபோதையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story