சேதம் அடைந்த நிலையில் கால்நடை மருத்துவமனை அதிகாரிகள் கவனிப்பார்களா?


சேதம் அடைந்த நிலையில் கால்நடை மருத்துவமனை அதிகாரிகள் கவனிப்பார்களா?
x
தினத்தந்தி 12 July 2021 9:17 PM IST (Updated: 12 July 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே, சாத்தனூரில் சேதம் அடைந்த நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையை அதிகாரிகள் கவனித்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்களா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சாத்தனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமானோர் கால்நடை வளர்த்து வருகிறார்கள். இந்த பகுதியில் வளர்க்கப்படும் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக சாத்தனூரில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது.

இங்கு சாத்தனூர், பழையனூர், காக்கையாடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால், அவைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. கட்டிடத்தில் சில இடங்களில் விரிசல்கள் காணப்படுகிறது.

மழைக்காலங்களில் சிரமம்

மழை காலங்களில் அங்கு கால்நடைகளை கொண்டு சென்று நிறுத்தி வைக்க போதுமான வசதிகள் இல்லாததால் சிரமம் ஏற்படுவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சேதம் அடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அதிகாரிகள் கவனித்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவமனை வளாகத்தில் நிழற்கூடங்களை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story