மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 9:56 AM IST (Updated: 13 July 2021 9:56 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த கஞ்சா பொட்டலங்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அம்பாள் நகரை சேர்ந்த ராமன் (வயது 23), காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த புள்ளப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (21) என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 2 பேரிடம் இது சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story