திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதல்; விவசாயி பலி
திருத்தணி அருகே தனியார் ஆம்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
விவசாயி பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தோமூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). விவசாயி. இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கனகம்மாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சி பாடி என்ற இடத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி எதிரே சென்ற போது, இவர் மீது தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக வந்து மோதியது.இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். தகவல் கிடைத்ததும் கனகம்மா சத்திரம் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு, பிரேத
பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்திற்கு காரணமான விழுப்புரம் மாவட்டம் பானூர் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மணி (51) என்பவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நேருக்கு-நேர் மோதல்
மேலும் அதேபோல், திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு, பெரியார் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேந்தன் (29). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் தொட்டிக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த மற்றொரு பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிள் வெற்றிவேந்தன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றிவேந்தன் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story