மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது


மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 3:28 PM IST (Updated: 13 July 2021 3:28 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம் தென், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவருடைய மனைவி பூர்ணிமா (46). முருகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு வந்த முருகன், மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் ஆத்திரத்தில் மனைவி என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியால் பூர்ணிமாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பூர்ணிமா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் தர்சாகீர் (40). இவருடைய மனைவி நசீமா (35). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு நசீமா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தர்சாகீர், இன்னும் சாப்பாடு செய்து வைக்கவில்லையா? என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் திடீரென சமையல் அறையில் இருந்த கத்தியால் மனைவி நசீமாவின் மார்பில் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்சாகீரை கைது செய்தனர்.

Next Story