தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக தலைவராக நீதிபதி என்.கிருபாகரன் நியமனம் தமிழக அரசு உத்தரவு


தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக தலைவராக நீதிபதி என்.கிருபாகரன் நியமனம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2021 5:22 PM IST (Updated: 13 July 2021 5:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக தலைவராக நீதிபதி என்.கிருபாகரன் நியமனம் தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவராக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இருந்துவருகிறார். ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அடுத்து 2-வது இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம்.

இதுவரை அந்த பதவியில் ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.சுப்பையா இருந்து வந்தார். அவர் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக தலைவராக மூத்த நீதிபதி என்.கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Next Story